ஒரு நாள் மட்டும்
கண்டதும் காதல் வயப்பட்டேன் ?
என்று உன்னை கண்டேனோ பெண்ணே
அன்றே எந்தன் உயிரைத் தந்தேனே !
என்ன ஆயிற்று எனக்கு?
என் நினைவுகளிலும் நீ,
என் கனவுகளிலும் நீ
நீயோ உன் பெற்றோறிடம் அணுமதி வாங்கி வரச்
சொல்லி காயப்படுத்துகிறாய் !
நான் எப்பொழுதும் துரதிர்ஷ்டசாலி
நான் தூது விடும் மேகங்கள் கூட உன்னை சேர்வதுக்குள் கரைந்து விடுகின்றன !
நான் கண்ணீரோடு காத்துருக்கிறேன்
என்றாவது ஒரு நாள் என் மனதை புரிந்து கொள்வாய் என்று !
என் கண்ணீர் கூட உன் மனதை கரைக்காவிடில்
காலமாவது உன் இதயத்துக்கு புரிந்த என் காதலை
உன் காதில் ரகசியமாய் ஒலிக்கட்டும் !
துயரம் என்றுமே சுகமாய் இருந்ததில்லை ,
ஆனால் உனக்காக அதை சுமந்து காத்திருக்க முடியும்,
கடைசி வரை !
அந்த ஆண்டவனை பழிக்கிறேன்
நம் விதியை மாற்றி எழுதியமைக்கு !
இறைவனே,
வேண்டுமானால் என் மீதி ஆறு ஜென்மங்களையும் எடுத்துக்கொள்
என்னவளுடன் வாழ ஒரு நாள் கொடு !
ஒரு நாள் மட்டும் !
ஆம் ஒரே ஒரு நாள் மட்டும் !
---------
ரோஜா
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment