Tuesday, May 20, 2014

பிணந்திண்ணிகள்
------------------
ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் உயிரை பறிக்கும் உரிமை யார் கொடுத்தது?

உயிரின் அருமையறியா மூடனே,

பசிக்காக சவத்தை தோண்டித்திண்ணும் பிணந்திண்ணியே,

வானம் பார்த்து காரி உமிழும் ஐந்தே,

நீ இப்படி ஈனனாவாய் என்றறிந்து இருந்தால்,

தன் தொப்புழ்கொடி கொண்டு உன் தாயே உன் கழுத்தை இறுக்கி இருப்பாள் !!!
என் காதலி
------------------

என்றுன்னைக் கண்டேனோ, அன்றே உன் அடிமை ஆனேன் !

என் நினைவுகளனைத்தும் நீ !

காலையில் உன்னைக் கண்டே எழுகிறேன்,

இரவிலும் உன்னிடன் விடைபெற்றெ உறங்குகிறென் !

ஐந்து மனித்துளிகொருமுறை உன்னைப்பார்க்காவிடில் மனம் துடிக்கிறது

உன் ஒவ்வொரு துணுக்குகளிலும் அவ்வளவு ஆனந்தம் ,

நீ அனுப்பும் புகைப்படங்கள் தான் என் நாளை பூர்த்தி செய்கின்றன,

என் காதலியின் பெயர் ....

.
.
.
.
.
.
.
.
.
என் காதலியின் பெயர் "Facebook"

எப்புடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடி ?
வீரபாண்டித்திருவிழா
-------------------------------------

சித்திரை தான் பொறந்தாச்சு, காப்பும் தோரணமும் கட்டியாச்சு,

எங்க ஊருத் திருவிழா தடைபுடலா தொடங்கியாச்சு,

இரண்டாவது தீவாவளி எங்களுக்கு அரம்பிச்சாச்சு,

எட்டு நாளுத் திருவிழா, திக்கெட்டும் பெருவிழா,

கௌமாரியம்மன் அருள் பெற முட்டிமோதும் எம் ஜனம்,

மழையினிலே ஏந்தி வரும் தீச்சட்டிகளும், காவடிகளும்,

மாரியம்மன் தேரைப் பார்த்து ஒவ்வொரு முறையும் வியந்து தான் போயாச்சு !

நெற்றியிலே என் தாய் வைக்கும் மாவிலக்கின் சூடின்னும் குறையலையே !

ஒரு வருடம் காத்திருந்து தண்ணித் துப்பாக்கியும் வாங்கியாச்சு,

ரோடெல்லாம் கடைகள், "வக்காலி, உப்பார்பட்டி வரைக்கும்
கடை இருக்கும் போல இருக்கே", மலைத்து தான் போயாச்சு,

ஜாடை காட்டிச் சென்ற பெண் பின்னால்
திருவிழா எங்கும் அலைந்தும் தான் பாத்தாச்சு,
அவள் முறைப் பையன் முறைத்து முறைத்து தொறத்தியும் விட்டாச்சு,

பனைக்கரமும், நீர் மோரும், பீம புஷ்ட்டி அல்வாவும்,
நுங்கும் இதர பழங்களையும் தின்னுந்தான் போட்டாச்சு,

இந்த வாட்டி புதுசா என்ன ராட்டினம் தான் வந்திருக்கு,
நானும் என் குட்டித் தங்கச்சியும் தேடித்தான் அலுத்தாச்சு?

43,44,45 முல்லை ஆற்றின் பாலத்திலிருந்து தண்ணிக்குள்ளே
நாங்கள் குதிப்பதை எண்ணி எண்ணி என் நண்பன் களைத்தும் தான் போயாச்சு,

எங்க ஊருத் திருவிழா தடைபுடலா தொடங்கியாச்சு,

முகநூலில் யாரோ போடும் திருவிழாவின் படத்தைப் பார்த்து,
அயல் நாட்டு மண்ணிலே மனதும் தான் கணத்தாச்சு
தியா
-----------------------------------------
தியா - என் மூன்று வயது மகள்
ஒரு இனிய இரவு,
அவளை தட்டிக்கொடுத்துக்கொண்டே,
கதைகள் சொல்லிக்கொண்டிருந்தேன்,
கதையின் திருப்பங்களுக்கேர்ப்ப
அந்த பிஞ்சு முகத்தில் தான் எத்தனை மாற்றம்,
நான்கு கதைகளுக்கு அப்பால் உறங்கிப்போனாள்,
அவள் தலை கோதியபடி அவளை ரசித்துக்கொண்டு நான்,
அவளின் மூடிய விழிகள் மெல்லத்திறந்தன,
என் மூக்கில் ஒரு முத்தமிட்டு,
"i love u appa" என்று சொல்லிவிட்டு
உறங்கிப்போனாள் !
நான் உறங்கத்தான் சில நாழிகைகள் ஆயிற்று !
பிரசவ வலி இல்லா பிள்ளைப்பேற்றின் ஆனந்தம் அடைந்தேன் !
இனி ஆண்களும் சம உரிமைக்காகப் போராடப் போகிறோம்,
எங்களுக்கும் வேண்டும் தாய்மை அடையும் வரம் !
இன்னொரு நாள்,
இளங்காலைப்பொழுது, அவசர கதியில்
அரக்கப் பரக்க ஓடிக் கொண்டு நான்,
திடீரென்று என் கால்களில் ஒரு பாரம்,
என் கால்களைக் கட்டிக்கொண்டு தியா,
அவளை அப்படியே அள்ளி எடுத்து,
நெற்றியில் முத்தமிட்டு அணைத்துக்கொண்டு
என்னடா என்று வினாவினேன் ?
இன்றைக்கு ஒரு நாள் அலுவலகம் செல்லாமல்,
என் கூடவே விளையாடுவியா "please" என்றாள் !
வேறு என்ன பாக்கியம் வேண்டும் ஒரு அப்பனுக்கு,
தாயுமானவன் ஆனேன் !