Saturday, October 31, 2009

பிரித்தெடுத்தல்

நான் உன்மேல் வைத்திருக்கும்
அன்பை விலக்கிவிட்டு,
காதலை விலக்கிவிட்டு,
பாசத்தை விலக்கிவிட்டு,
நேசத்தை விலக்கிவிட்டு,
பரிவை விலக்கிவிட்டு,

நான் எழுதிய
காதல் கவிதைகளை மறந்து விட்டு,

நான் செய்த தவறுகளை மட்டும்
பிரித்தெடுத்து அசை போடுகிறாயே !

நீயென்ன
அன்ன பறவையின்
மறு பிறவியா ?

இல்லை இல்லை
நீ அன்ன பறவையின்
எதிரிடை !
தவறானவற்றை அல்லவா பிரித்தெடுக்கிறாய் !

------------
ரோஜா

Saturday, October 17, 2009

காதல் தோல்வி

நிலவொளி சிந்தும்
இனிய இரவு !

முதுகுகள் மட்டுமே பேசிக்கொள்ளும்
படுக்கை அறையில்
என் மனைவியோடு நான்,
உன் கணவனோடு நீ !

சந்திராயன் ஏறி
பழைய உலகில்
சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன
இருவர் மனமும் !

நம் காதல் தோல்வி பற்றி
ஊர் கி்சுகி்சுப்பது
நம் காதுகளில் விழாமலில்லை !

எது காதல் தோல்வி ?

ம்ம்மென்று வெட்கத்துடன்
நீ என் தோளில் எப்போது சாய்ந்து
சம்மதித்தாயோ,

அன்றே
வென்று விட்டது நம் காதல் !

மற்ற சம்பிரதாயங்களில்
எனக்கு உடண்பாடு இல்லை !

ரோஜா

கோர தாண்டவம்

கோர தாண்டவம் ஆடுகிறான் ராஜபக்ஷே !

தலை கொய்தி எங்கள் தலைவனை
கொன்றுமா அடங்க வில்லை உன் பசி ?
அந்த பிஞ்சு மார்பில்
தோட்டாவை பாய்ச்ச எப்படி தான் மனம் வந்ததோ ?

கேட்பார் எவரும் இல்லை !

விபச்சாரிகளாய் தமிழக மக்கள் !
ஆம்,
ஓட்டுக்காக பணம் பெற்றுக்கொண்டு வைகோ வைத்
தோர்க்கடித்தோமே !

நமக்கென்ன கவலை
பிளாக்கில் டிக்கெட் வாங்கி போய் எந்திரன் பார்க்கலாம் !

-ரோஜா