ஈழம்
யுத்த பூமியில்
பிறந்ததைத் தவிர
வேரு என்ன
பாவம் செய்தீர்கள் ?
கொத்துக் கொத்தாய்
செத்து
மடியும் என் சொந்தங்கள் !
வேடிக்கை மட்டுமே பார்த்து
வெம்மிப் புடைக்கிறோம் !
நம் கையாலாகாதனத்தை
எண்ணி,
வானம் பார்த்து காரி
உமிழ்வதை தவிர
வேறு என்ன செய்ய ?
எத்துணை கடவுள்கள்,
ஒரு
இனமே அழிவதை
வேடிக்கை பார்த்துக்கொண்டு !
நெஞ்சு பொறுக்க வில்லை
என் உறவுகளே !
ஆனால்,
செய்வதறியா சூழ்நிலைக் கைதிகளாய்
கட்டுண்டு நாங்கள் !
இதற்கு
தீர்வு தான் என்ன ?
விடிவு தான் எப்போது ?
கேள்விகளுடனும், கண்ணீருடனும்
உங்கள் சகோதரன்.
-ரோஜா
Friday, April 17, 2009
Saturday, April 4, 2009
நாம்
உடலோடு உயிர் போனாலும் , என்
உணர்வுகள் காற்றோடு கலந்திடுமே - உந்தன்
நெஞ்சமே தஞ்சமென்று - உன்
மூச்சோடு கலந்திடுமே.....
உன் சிரிப்பினிலே அது வளர்ந்திடுமே....
உடல்கள் வேறானாலும்
உறவுகள் நம்மை பிரித்திருந்தாலும்
நம்
உணர்வுகள் ஒன்று தானே ....
அது என்றும் நம்மை இணைத்திடுமே..........
உணர்வுகள் காற்றோடு கலந்திடுமே - உந்தன்
நெஞ்சமே தஞ்சமென்று - உன்
மூச்சோடு கலந்திடுமே.....
உன் சிரிப்பினிலே அது வளர்ந்திடுமே....
உடல்கள் வேறானாலும்
உறவுகள் நம்மை பிரித்திருந்தாலும்
நம்
உணர்வுகள் ஒன்று தானே ....
அது என்றும் நம்மை இணைத்திடுமே..........
Subscribe to:
Posts (Atom)
