நேற்று ஒரு இனிய கனவு !
ஓரு தனி தீவு !
என்னவளுடன் நான், நான் மட்டும் !
காற்று கூட சற்று விலகியே வீசுகிறது எங்களை பிரிக்க மனமில்லாமல் !
என்னருகில் என்னவள், அந்த மாலைக் கருக்கலில் தேவதையை போல !
ஓர வஞ்ஜணை செய்து விட்டான் ப்ரஹ்மன் !
என் கண்களால் அவள் விழி மூடிய நிலையில் ஓரு கணம்!
என் மார் மீது அவள் தலை வைத்து தூங்கும் அழகை என்னவென்று நான் சொல்ல !
நான் தட்டி கொடுத்தது தன் தாயின் தாலாட்டு போலிருந்தது போல, என்னை இருக்கிக் கொண்டாள் !
என்னவளுடன் நான், நான் மட்டும் !
எங்களை மரணம் கூட கட்டி அணைத்த நிலையில் தான் சந்திக்க நேரிடும் !
மரணமா ? எங்களுக்கேது மரணம் ?
நாங்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ வரம் கிடைத்து விட்டது !
ஆம்,
அத் தனித்தீவில் ஏன்னவளுடன் நான், நான் மட்டும் !
நான் மட்டும் !நான் மட்டும் !நான் மட்டும் !
---------
ரோஜா
Subscribe to:
Post Comments (Atom)

நல்ல கனவு. கனவுகள் பல காண வாழ்த்துக்கள்.
ReplyDelete