Wednesday, February 24, 2010

வீழ்வேன் என்று ?

தேடிச் சோறு நிதன் தின்று -பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம்
வாடி துன்பம் மிகு உழன்று -பிறர்
வாட பல செயல்கள் செய்து -நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடும்
கூற்றுக்கு இரையென பின் மாயும் -பல
வேடிக்கை மனிதரைப் போல -நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ பராசக்தி ?


நின்னை சில வரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்கு தருவாய் - என்றன்
முன்னை தீயவினை பயன்கள் - இன்னும்
மூலத்தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னை புதிய உயிர் ஆக்கி - எனக்கு
ஏதும் கவலையறச்செய்து - மதி
தன்னை மிகத் தெளிவு செய்து - என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய் !!!
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய் !!!
------------------------------------------------------------------------
பாரதியார்

No comments:

Post a Comment