Monday, February 15, 2010

சுயசரிதை

கடந்தோடிய என்
வாழ்வின் நிகழ்வுகளை
எண்ணிப் பார்த்தால்
சுயசரிதையாய்
அனைத்து பக்கங்களிலும் நீ !

இருப்பினும்
திருவிழாவில் கிலுகிலுப்பைக்காக
ஏங்கும் குழந்தையையாய்
உன் அன்புக்கு ஏங்கும்
நிலை தான் எனக்கு !

கானல் நீர்
கைக்கெட்டாது என்பது நன்கறிந்தும்
பாலைவனத்தில் தத்தளித்துக்
கொண்டு நான் !

------------------
ரோஜா

No comments:

Post a Comment